JaffnaObituary

உயர்திரு. சுப்பிரமணியம் கருணாகரன்

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பத்தாம் வட்டாரம் புங்குடுதீவு கிழக்கை வதிவிடமாகவும் சந்தையடி பிரபல மணியம்ஸ் ஸ்ரோர்ஸ் வர்த்தக நிறுவன உரிமையாளருமான உயர்திரு. சுப்பிரமணியம் கருணாகரன் அவர்கள் 30:12 :2021 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதமடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மணியம் ஸ்ரோர்ஸ் சுப்பிரமணியம் மாணிக்கம்(மணியாச்சி) தம்பதிகளின் அருமைப்புதல்வரும் காலஞ்சென்ற கொழும்பு ஆமர் வீதி பிரபல வர்த்தகர் ஆர் எம்.சின்னத்தம்பி , முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகரும் சாரதாம்பாளின் அருமைக்கணவரும் சுகிர்தா, கலையரசி, முரளிதரன் , நாவலன்( வேலணை பிரதேச சபை உறுப்பினர் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் ) குணாளன் ( தீவக சிவில் சமூகம் பொருளாளர் ) ஆகியோரின் அருமைத் தந்தையும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் நாளையதினம் ( 02 – 01 – 2021 ) ஞாயிற்றுக்கிழமை ஒரு மணியளவில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மாலை மூன்று மணியளவில் புங்குடுதீவு மண்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கருணாகரன் முரளிதரன் ( மகன் )
+33 6 05 55 99 89
 கருணாகரன் நாவலன் ( மகன் )
+94 77 716 8755
கருணாகரன் குணாளன் ( மகன் )
778945856

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + sixteen =