
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் வீரகத்திப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விஜயபாமா, விஜயராணி மற்றும் சுபத்திரா, விஜேந்திரா, வேதநாயகி, காலஞ்சென்றவர்களான நளாயினி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாநாயகம், ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, மற்றும் கெங்காதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராசேந்திரம், நடராசா, சிவபாக்கியம், தங்கராசா மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற லோகநாதன், ஜெயகாந்தன், திலகவதி, சங்கரநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்குமரன், சிவகாமி, அபிராமி, சங்கரி, சாளினி, சிவைதினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சரன், சாத்விக், கீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா சிற்றம்பலம், சுகிர்தரத்தினம் மகாதேவன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு – திங்கள் 10-01-2022 மாலை 05:00 – 08:00 மணி
உங்கள் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு ஒரு நிமிஷம் மாத்திரமே பார்வைக்கு அனுமதி உண்டு.
மரணச் சடங்கு:- செவ்வாய் 11-01-2022 சாயங்காலம் 1:00 – 4:00 மணி கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மரணச் சடங்குகளில் 25 பேர் மாத்திரமே பங்கு கொள்ள அனுமதி உண்டு. ஏற்கனவே 25 உறவினர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டு விட்டது. அதேநேரத்தில் வலைத்தளத்தின் மூலமாக மரணச் சடங்கு பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றது.
நேரடி ஒளிபரப்பு: Click Here
https://funeraweb.tv/en/diffusions/43979
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சுபத்திரா – மகள் | |
![]() ![]() | +14388780183 |
| விஜேந்திரா – மகன் | |
![]() ![]() | +14168778409 |
| வேதா – மகள் | |
![]() ![]() | +15142902124 |
| நாதன் – மருமகன் | |
![]() ![]() | +15146793427 |






