யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுமதி ஜெயரட்ணம் அவர்கள் கடந்த 17-07-2024 புதன்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் நல்லையா, பூமணி தம்பையா தம்பதிகளின் தவப்புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசா, சின்னக்குட்டி தம்பதிகளின் மருமகளும்,
தவமலர், தவமணி, காலஞ்சென்றவர்களான பூரணம், பரமேஷ்வரி ஆகியோரின் பெறாமகளும்,
இராசா ஜெயரட்ணம்(ஜனா சிவில் வேக்ஸ்(கட்டட ஒப்பந்ததாரர்), ஜனா ஹாட்வெயார், துர்க்கா மரக்காலை நெத்தலியாறு விசுவமடு) அவர்களின் அன்பு மனைவியும்,
நிதர்ஷனன்(ஜனா -லண்டன்), துர்க்கா(சிங்கப்பூர்), கீர்த்தனா(JSAC நிறுவனம்,யாழ்ப்பாணம்), தாட்சாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுவர்ணப்பிரதா(லண்டன்), கதீஷ்(சிங்கப்பூர்), திருமாறன்(சுகாதார அமைச்சு,வடமாகாணம்), சதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
சுரேன்(இமையாணன்), அகிலன்(புதுத்தோட்டம்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
நவரத்தினம், கேசவன் ஆகியோரின் மாமியும்,
ஜெய்த்ரன், ஜெய்த்விக் ஆகியோரின் அன்பு நிறைந்த அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இமையாணன் “ஜெய்பவன்” எனும் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் வல்லை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94776000970 |
வீடு – குடும்பத்தினர் | |
+94779358248 |
ஜனா – மகன் | |
+447796346757 |