
அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், அம்மன் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி இளையதம்பி எலிசபெத் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், வீரசிங்கம் அழகுராசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
உஷாந்தினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வமணி தினேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,
கோவிந்தசாமி செல்வமணி, சசிகலா செல்வமணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி(மலர்), அல்பேட் ஜெகராஜசேகரம், எட்வர்ட் துரைராஜசிங்கம் மற்றும் ஜோன் குமாரகுலசிங்கம், காலஞ்சென்ற ஜெர்ச் திருச்செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாநிதி சாம் தியாகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), பரிமளாதேவி சங்கர்(பிரித்தானியா), சுமதினிதேவி பிரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற Dr சாம்பசிவமூர்த்தி, லலிதாதேவி(பிரித்தானியா), சிவநேசகுமாரி(கனடா), ருத் இராணுமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எலிசபெத்(கனடா), இசபெல்லா(கனடா), கமலரூபன்(கனடா), பொப்ஹான், எலிசபெத் நிரோஷிகா, ஜெனிபர் நிலக்ஷிக்கா, சங்கரலிங்கம் மகாராஜா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கல்முனை 95 அம்மன் கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பிரார்த்தனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து YMCA வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கல்முனை கிறிஸ்தவ கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சாம் தியாகலிங்கம்(மருமகன்).
தொடர்புகளுக்கு
சாம் தியாகலிங்கம் – மருமகன் | ![]() |
![]() ![]() | +13392237223 |
| உஷாந்தினி – மகள் | ![]() |
![]() ![]() | +919361183526 |
சக்தி சந்திரசேகரம் – மனைவி | |
![]() ![]() | +94767826071 |
ஜோன்குமாரகுலசிங்கம் – சகோதரர் | |
![]() ![]() | +94740279666 |







