ColomboJaffnaObituary

திருமதி கமலாதேவி செல்வநாயகம்

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி செல்வநாயகம் அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு, இளையாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், சங்கானையைச் சேர்ந்த பொன்னையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தரூபன்(கனடா), சிவரூபன்(இங்கிலாந்து), சிவாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஷியாமினி, ஸ்ரீறிமதி, தேவப்பிரியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புனிதவதி(கனடா), யோகநாதன்(கனடா), யோகேஷ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான குமாரசிவம், மகேஷ்வரன், தயானகுணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிஷான்(கனடா), டிரூபா(கனடா), ஹரிகேஷ்(இலங்கை), கமேஷிகா(லண்டன்), செனோஷிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்ரீரஞ்சன்(டென்மார்க்), சுதர்சன்(கனடா), காயத்திரி(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

சிவரதன்(இலங்கை), கன்னியா(இலங்கை), காயத்திரி(கனடா), காசினி(கனடா), பிரதீபன்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சிவகுமார்(பிரான்ஸ்), வேதநாயகி(கனடா), காலஞ்சென்றவர்களான பொன்மணிதேவி, சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஹுனுப்பிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
No. 28/12 Seewala Mawatha,
Hunupitiya,
Wattala.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தரூபன் – மகன்
  +15148926182
சிவாஜினி – மகள்
 +94766160699
தேவப்பிரியன் – மருமகன்
+94773027026

Related Articles