JaffnaObituary

திருமதி இந்திராணி வடிவேல்

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி வடிவேல் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், நேசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா(சண்டிலிப்பாய் வடக்கு), ஞானலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பையா வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைவாணி(ஆசிரியை ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலயம்), திருக்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதாகரன்(ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி), கிந்துஷா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அருணகிரிநாதன்(சுவிஸ்) மற்றும் தில்லைநாதன்(கனடா), யோகநாதன்(கனடா), பராசக்தி(சுவிஸ்), அருந்ததி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானுஜா, அவந்திகா, அதுல்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் அளவெட்டி தம்மளை முள்ளான இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கலைவாணி – மகள்
 +94757808140
 திருக்குமரன் – மகன்
 +447507430625

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eleven =