திரு வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை
யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல.1054, பாலையூற்று, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
கோகிலவதனா(நெதர்லாந்து), கோகில வனஜா(பிரான்ஸ்), ஜெயமாலினி(ஆசிரியை- தி புனித மரியாள் கல்லூரி), துஷ்யந்தி(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை, திருக்கோணமலை), தனஞ்செயன்(பிரான்ஸ்), கலாநிதி சடகோபன்(பொறியிலாளர், ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஞானவரோதயன், சிவபவான்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரவடிவேலன், ஜெகதீசன்(ஆசிரியர்- தி/புனித மரியாள் கல்லூரி, திருகோணமலை), சிவரூபன்(உரிமையாளர்- சண் எலக்ரோனிக், திருகோணமலை), வதனா(பிரான்ஸ்), சுஜீதா(பொறியியலாளர், ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சற்குணநாதன், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிரோஷன்(வைத்தியர், நெதர்லாந்து), கபிலன்(பொறியியலாளர், நெதர்லாந்து), வைஷ்ணவி(மருந்தாளர், பிரான்ஸ்), பிரணவன்(பொறியியலாளர், பிரான்ஸ்), சஞ்சய்(பிரான்ஸ்), அட்ஷரன், அம்ஷவி, ஜாதவி, ஹிருத்திக், அக்ஷயா, அஷானா, ஆதித்யன், அத்விகா, அஸ்விகா, அர்மன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அயான், மைரா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-04-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் இல.1054, பாலையூற்று திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதனைத்தொடர்ந்து 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் விடத்தற்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94761067705 | |
வீடு – குடும்பத்தினர் | |
+94773433301 |
தனம் – மகன் | |
+33652334280 | |
சடா – மகன் | |
+18645064438 |