
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவதாசன் கஜந்தன் அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம் சிவதாசன் மற்றும் கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், விஜயராஜ் நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,வினுசா அவர்களின் பாசமிகு கணவரும்,ஜரிஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,சிவந்தி, கஜலன், கஜந்தி(லண்டன்), றஜந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிறிக்கந்தகுமார், மதன்(லண்டன்),மாலினி,விமல்ராஜ்ஆகியோரின்அன்புமைத்துனரும்,விபூசனன்(லண்டன்), வித்தகன்(பிரான்ஸ்), கேசிகா(லண்டன்), நித்திலம்(லண்டன்), காலஞ்சென்ற துஷானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அப்சரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் பண்டாரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 44/01 அம்மன்கோவில் வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94773652433 |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +447867978202 |





