யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், Brampton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. றினோச் நித்தியானந்தன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜேந்திரன் -மரகதம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரவநாதன்-கனகமணி தம்பதியினர் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற நித்தியானந்தன் (ஆனந்தன்)-மணிமாலா (வாசுகி) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
சர்ஜினா, லிசானா, கிஷோர் ஆகியோரின் அருமைத் தம்பியும்,
சேந்தன், திருசன் ஆகியோரின் ஆசை மைத்துனரும்,
நித்தீரனின் குட்டி மாமாவும், ரஞ்சிதமலர்-எம்.எஸ். தனபாலன், வசந்தமலர்-சிவனேஸ்வரன், ரவீந்திரநாதன்-கூல்சன், துரேந்திரநாதன்-ஜெனமலர், திருநாதன், ஜெகநாதன்-கவிதா ஆகியோரின் ஆசை மருமகனும்,
சிவானந்தன்-சுஜாதா, சசிமாலா-மகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் மற்றும் மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேந்தன் (மைத்துனர்) | |
+1 614 914 0764 |
திருசன் (மைத்துனர்) | |
+1 647 984 1602 |