
காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், இல: 07 பிரதானவீதி கூமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 28.01.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னைநாள் வர்த்தகர், பாணந்துறை, தங்கொட்டுவ) இராசம்மா தம்பதியரின் அன்பு புதல்வனும்,
காரைநகர் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான அருணாசலம் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகனும்,
சந்திராதேவியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற Dr விஜயரட்ணம், சிவலிங்கம், கனகலிங்கம், கனகேஸ்வரி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தர்சனா, கார்த்திகா, யமுனா, தயாநிதி, செந்தூரனின் பாசமிகு தந்தையும்,
பாலரஞ்சன், சிவகரனின் அன்பு மாமனாரும்,
சிவகௌரி, ஞானவதி, குணரட்ணம் (ஸ்ரீரங்கன் என்ரபிறைஸ்), சாந்தி,தனபாக்கியம், யோகேஸ்வரன்,(ஓய்வுபெற்ற வவுனியா இலங்கை வங்கி பதில் முகாமையாளர்) சேனாதிராசன், வரதராசன் (ஓய்வுபெற்ற வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலய உப அதிபர்), தவராசன், சீதாலட்சுமி லிங்கேஸ்வரன், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, விமலாதேவி, காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், தர்சினி, கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 30.01.2022 காலை 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
இல:07 பிரதானவீதி
கூமாங்குளம்
வவுனியா
| தொடர்புகளுக்கு | |
| கந்தையா சிவலிங்கம் | |
![]() ![]() | +94 77 068 42 54 |
| சுந்தரலிங்கம் செந்தூரன் | |
![]() ![]() | +94 76 654 50 53 |





