ObituaryUṭuppiṭṭi

திரு விஸ்வலிங்கம் சிவஞானம் (திரவியம்)

திரு விஸ்வலிங்கம் சிவஞானம் (திரவியம்)

திரு விஸ்வலிங்கம் சிவஞானம் (திரவியம்) உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் நேற்று முன்தினம் (09.05.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – செல்லாச்சி தம்பதியரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை -லெட்சுமிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், செந்தமிழ்ச்செல்வன், பத்மாவதி, ரமேஸ், காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருஞானம் (சுந்தரி), காலஞ்சென்ற சொர்ணகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திரு விஸ்வலிங்கம் சிவஞானம் (திரவியம்) அவர்கள் மகேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகதீஸ்வரன், ராதா, நித்தியா, வாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரதீபன், ராகவி, பானுஜன், ஹோவர்த்தனன், சஞ்சீவி, அபிஷாந், சந்தோஷ், மகிபன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிநிந்தன், நிநிந்தினி, நிநிந்துஜா, நிநிந்தீபன், நிநிந்துறூபன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
+94212263960
+94766100610

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =