CanadaObituary

அமரர். சாரதாம்பாள் நுட்பநாதன்

அமரர். சாரதாம்பாள் நுட்பநாதன்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்கள் 02.05.2021 அன்று சுவிஸ் Moehlin AG இல் காலமானார்.

விழியோரம் கசிகின்ற கண்ணீர்…
வழியெங்கும் தென்னம் தோரணம்,
ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி..
சாரதாம்பாள் அன்னை,
இறைவனடி காவியம்..

சாந்தமாய் சற்சொரூபியாய்
பாசத்தையும் நேசத்தையும்
ஊட்டி வளர்த்த ஓவியமே..
புங்கையின் வழித்தோன்றலாய்,
தென்றலாய் வந்த தெய்வப்பிறவி
சாரதாம்பாள் அம்மா..

ஊரோடு்ம் உறவுகளோடும்
ஓயாமல் ஒய்யாரமாய்
துக்கதுயரங்களை சுகம்,
விசாரிக்கும் சொந்தமே..
மண்ணைவிட்டுப் போனதேன்..

கண்ணகி அம்மனின் பக்தையாய்..
கணீரென்ற குரலில் தேவாரம்,
பிள்ளைகளும் அவ்வழியே பயணம்..
அவர்களுடனேயே நற்காரியத்துக்காக
பேரப் பிள்ளைகளோடு, மருமக்களும்
கூடி கொடை வழங்கும் கோபுரங்கள்..

வைத்தியசாலையைத் தத்தெடுத்து
கைகொடுத்து உதவி செய்த புண்ணியம்..
நோய்நொடி வந்தோர்க்கு ஆறுதல்..
புங்குடுதீவு செய்த புண்ணியம்..

அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..
வணங்கி பாதம் தொழும்
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்…
ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி..

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாமும் இப்பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

அஞ்சலித்து வணங்குவோர்..
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிட்ஸர்லாந்து.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =