KoppaiManipayObituary

திரு செல்லதுரை இராசலிங்கம்

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலை டச் ரோட்டைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவில் தெற்கு யாமா சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லதுரை இராசலிங்கம் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமுதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சரோஜாதேவி, ரகுநாதன், சத்தியதேவி, குகநாதன், சகிலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வேதநாயகி(மணி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் ரமணி, பாஸ்கரன், கவிதா, முருகவேள், ரட்ண ரூபி, பிரதீபன், கலா ரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபயவரதன், காலஞ்சென்ற சண்முகவரதன் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், செல்வராசா, தம்பித்துரை, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுனன், சாஜினி- துஷ்யந்தன், சர்வினி, அபிநிஷா, ஆதீபன், ஆரூஷன், அக்ஷதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கவின், கயல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஜாமாச்சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவி – மகள்
+94771957978
சகிலாதேவி – மகள்
 +94776104167
பாஸ்கரன் – மருமகன்
+447366594029
ரகுநாதன் – மகன்
+491783172002
 குகநாதன் – மகன்
+4740085513

Related Articles