அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம் அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மறைந்த ஞானப்பிரகாசம் விக்டோரியா பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை Nicholas(அரசு), மரியஆரோகாணம்பிள்ளை(துரைச்சாமி), மரியம்மா திருநாவுக்கரசு(மாமணி), மரியநாயகம்பிள்ளை(பொன்னுச்சாமி), பப்ரிஸ்ற்(Baptist- ராசா), அந்தோனிப்பிள்ளை(பாலசிங்கம்), திரேசா மலர் பூவிலிங்கம்(மலர்), ராஜரத்தினம்(ரத்தினம்), செபஸ்ரியாம்பிள்ளை(செல்லக்கோன்), ஜீவரட்னம்(ஜீவம்), தியாகராஜா (தியாகு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நெடுந்தீவில் 08.09.1928 இல் மரிய உதய புஸ்பமாக பெற்றோர் ஞானப்பிரகாசம் விக்டோரியா பிள்ளை தம்பதியினரின் ஐந்தாவது பிள்ளையாக உதித்தார். அவர் தனது பதினொரு சகோதர சகோதரிகளுடன் அன்பின் குடும்பமாக புனித குடும்பத்தின் சாட்சியாக வளர்ந்து மலர்ந்தார்.
புனித குடும்பத்தின் அன்பின் சாட்சியாக தனது வாழ்வை அர்ப்பணித்து துறவு வாழ்வை தொடங்கிய அவரின் நீண்ட வாழ்கை என்பது ஒரு முழுமையான இறைவனுக்கும், சமூகத்திற்குமானதாகும்.
அருட்சகோதரியாகவும், ஆசிரியராகவும் தொடங்கிய அப்பணியில் மென்மேலும் ஆளப்படுத்த இறையியலின் மேற்படிப்பை மேற்கொண்டு தன்னை இறை ஞானத்தில் மெருகேற்றி ஆன்மீக பணியை ஆளப்படுத்தினார்.
Provincial Superior (Jaffna), General Councilor (Rome) கடமையாற்றியதுடன் இந்தியாவில் திருக்குடும்பக் கன்னியரை உருவாக்கியதில் தன் பெரும் பங்கையளித்து எண்ணற்ற ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வை மேம்படுத்தி ஒளியேற்றினார்.
ஓய்வின் பின் தன் தளர்ந்த உடல் நிலையிலும் சந்திக்க வரும் உற்றார், உறவுகளிடம் ஏழை எளிய மக்களின் நலன்களை முன் நிலைப்படுத்திய இறைவனின் மகள், நெடுந்தீவு பெற்றெடுத்த தவப்புதல்வி.
இறைவன் அவரையும் திருத்தந்தையையும் ஒரே நாளில் விண்ணகம் அழைக்க திருவுளம் கொண்டாரோ! காலம் சென்ற தம்பி மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு உடன் அங்கு ஏனைய விண்ணக வாசிகளுடன் இறைவனை புகழ்ந்தேற்ற வரம் வேண்டுமென யாசிப்பதுடன்
இவ் வேளையில் அவரின் முதுமையில் அன்புடனும், கனிவுடனும் கவனித்துக்கொண்ட அனைத்து அருட் சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
திருப்பலி | |
Friday, 25 Apr 2025 3:00 PM | St. Mary’s Cathedral Jaffna 8 Grusoult, Rd, Jaffna, Sri Lanka |
நல்லடக்கம் | |
Friday, 25 Apr 2025 3:30 PM | St.Mary’s Catholic Cemetery St.Patrick Rd, Jaffna, Sri Lanka |
தொடர்புகளுக்கு
பாலசிங்கம் தவபாலன் – . | |
+94763608534 |