ColomboJaffnaObituarySrilanka

செல்வி சரோஜினிதேவி தர்மலிங்கம்

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சரோஜினிதேவி தர்மலிங்கம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் திருவடிகளை அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி மா.தர்மலிங்கம் (இல-55, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்) அவர்களின் புத்திரியும்,

காலஞ்சென்ற குலேந்திரன் (வங்கி உத்தியோகத்தர்), கணேசலிங்கம், மகேந்திரன் (ஜேர்மனி, ரோகிணி  (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமதி. ப.குலேந்திரன், திருமதி.சொ.மகேந்திரன், கவிராஜசேகரம் ஆகியோரின் மைத்துனியும்,

திமித்தியின் (பிரித்தானியா) பாசமிக்க பெரியம்மாவும்,

மாதவி, தமயந்தி, மீரா, கபிலன், தனுசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ரோகிணி (சகோதரி)
 +94 77 148 1714
திமித்தி (பெறாமகள்)
 +94 76 274 6843
ரட்ணகுமார்
 +94 71 683 7602

Related Articles