யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் 107/1, சிவநகரை வதிவிடமாகவும், கிளிநொச்சி புதுமுறிப்பு சோலை நகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் மோகனாம்பிகை அவர்கள் 26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், சண்முகராசா அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,தர்மினி(லேகா- பிரான்ஸ்), வேந்தன்(பிரான்ஸ்), தசிகரன்(கரன் -பிரான்ஸ்), தர்ஷா(சோலைநகர்), தர்சிஹா(கோபிகா- சோலைநகர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிருபன், நிரோஜன், வினிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், மனோவதி மற்றும் ரஞ்சிதமலர்(சிவநகர்), ரேவதி(பிரான்ஸ்), உருத்திரகுமார்(வட்டக்கச்சி), கருணாகரன்(கனடா), காலஞ்சென்ற மனோகரதேவி மற்றும் பாஸ்கரன்(ஜேர்மனி), ஸ்ரீதரன்(சிவநகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,டினுக்சன், நிலுக்சா, ஆயிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் சோலை நகர் புதுமுறிப்பு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.