யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர் லோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், இரத்தினசபாபதி, தம்பிராசா, தங்கம்மா மற்றும் பரமநாதன், தேவநாதன் ஆகியோரின் சகோதரியும்,
பாலகிருஷ்ணன்(ராசா,பாலு,ஷான்), குமுதினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
தம்பிரட்ணம்(சுன்னாகம்) அவர்களின் சின்னம்மாவும்,
ஜெயசந்திரன்(மூளாய்), ஜெயகுமார்(மூளாய்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஹரப்பிரியா, ஜனார்த்தனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபக், கனிகா, நிஷாந்தன், மதூரிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 07-09-2024 சனிக்கிழமை அன்று மூளாயில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-09-2024 ஞாயிற்றுகிழமை மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பிற்பகல் பித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+41764482751 |