யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், மணியர்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கருணாமூர்த்தி அவர்கள் இன்று சனிக்கிழமை 15-03-2025 அதிகாலை யாழில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி (இரத்தினம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, மாணிக்கம், பரஞ்சோதி, இராசேஸ்வரி, தவராசா மற்றும் யோகேஸ்வரி (யோகம்-மணியர்குளம்), இன்பராணி (ராணி-மாதகல்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம், மார்கண்டு, பாலசுப்பிரமணியம் மற்றும் சின்னத்துரை (மணியர்குளம்), மகாதேவன் (தேவன்-மாதகல்), யோகபாக்கியம் (தேவி-மணியர்குளம்) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகலில் நடைபெற்று, புகழுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு