யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும், செட்டித் தெரு நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தையல்நாயகம் சிறீகாந்தா 15-02-2025 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னர், காலஞ்சென்றவர்வகளான நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – காமட்சி சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறீகாந்தா அவர்களின் பாசமிகு மனைவியும், பகீரதன், கஜேந்திரன், சஞ்செயன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிவதர்சினி, யோகவாணி, துளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரா, சனகன், மதுவர்சினி, கீர்த்தன், மறவன், செம்பியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், நாகரத்தினம் மற்றும் செல்லம் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல- 58 /12, செட்டித்தெரு,
நல்லூர்.
தொடர்புகளுக்கு
+94 76 212 9821