யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தபோநிதி யோகேஸ்வரன் அவர்கள் 16-02-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – செந்தாமலர் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற வினாசித்தம்பி – கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,
யோகேஸ்வரன் (இளைப்பாறிய அதிபர் – துணைவி அ.மி.த.க பாடசாலை வட்டுக்கோட்டை, மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. திவ்யா (வைத்தியர் – மீரிகம), ரம்யா (ஆசிரியர் ), Dr. சரண்யா (வைத்தியர் – யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புத் தாயாரும்,
Dr. கஜந்தன் (வைத்தியர் – கொழும்பு கண் வைத்தியசாலை), Dr. கோகுலன் (வைத்தியர் – போதனா வைத்தியசாலை அனுராதபுரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், சொரூபநிதி, ஹரிமுகன், ஸ்ரீகுமாரன், துருபன் (நோர்வே), சயாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், மகேஸ்வரன், ஞானேஸ்வரி, சந்திரநிதி, மன்மதராஜா, மாலினி, யசோதா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷ்வதாவின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோகுலன் | |
+94 77 199 9657 |