JaffnaObituarySrilanka

திருமதி ஸ்ரீஸ்காந்தன் வசந்தா

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை பிறப்படமாகவும் வசிப்படமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தன் வசந்தா அவர்கள் நேற்று சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான கார்த்திகேசு புஷ்பவதி தம்பதியரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கைலாசப் பிள்ளை கண்ணம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்.

ஸ்ரீகாந்தன் (உரிமையாளர் அம்பாள் களஞ்சியம்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவகஜனி (ஷாலினி வளர்மதி முன்பள்ளி ஆசிரியர் கொக்குவில்),சாரங்கன் (முகாமையாளர், வியாபார முன்னேற்றம், விரிவுரையாளர் Esoft Metro Campus Jaffna).ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலம் சென்ற வரதா மற்றும் வதனி ஆகியோரின் அன்பு சகோதரியும்,உருத்திரக் கண்ணாவின் அன்பு மாமியாரும்,

ஷஸ்வினி ஸ்ரீவர்ணி ஆகியோரின் அன்பு பேத்தியும்,புஸ்பமாலா இரஞ்சிதமாலா,ஸ்ரீதரன் (பொலிவியா ),காலம் சென்ற ஜீவமாலா ,ஸ்ரீவரதன் மற்றும் ஸ்ரீபாலன் (ஜெர்மனி),ஜெயமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,

இரத்தினவேல் (அத்தான் ),தர்மசேனன் ,விஜயலலிதா,காலம் சென்ற தங்கேஸ்வரன் மற்றும் கலாராணி ,அருளானந்தம் ,பற்றீசியா ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (31.03.2025)திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று ,பின்னர் பூதவுடல் புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ,பிற்பகல் 3.00 மணியளவில் புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல் :குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


குடும்பத்தினர்
+0741322350
குடும்பத்தினர்
 +0766442214


குடும்பத்தினர்
+0779362632

Related Articles