
யாழ். நல்லூர் கோவில் வடக்கு வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா விஜயஈஸ்வரன் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று நல்லைக் கந்தனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சோமசுந்தரம்(இளைப்பாறிய வைத்தியர்) பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகையா(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்) நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயஈஸ்வரன்(இளைப்பாறிய படவரைஞர், நீர்ப்பாசனத் திணைக்களம்) பாசமிகு மனைவியும்,
Dr. முரளிதரன்(இளைப்பாறிய Senior Lecturer, Australia) அவர்களின் அன்புச் சகோதரியும்,
யாழினி(ஆசிரியை- நல்லூர்), ஜனகன், யசோதரன்(முகாமைத்துவ உதவியாளர்- Coconut Cultivation Board), ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீசிவா(பொறியியலாளர்- Ideal Engineering Pvt Ltd), ரஞ்சித்(சவூதி- ஊரெழு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீ ஜான்வி அவர்களின் பாசமிகு பேத்தியும்,
விஜயராஜா(லண்டன்), விஜயராணி(லண்டன்), காலஞ்சென்றவர்களான விஜயநேசன்(லண்டன்), விஜயசுந்தரி(இந்தியா) மற்றும் விஜயஈஸ்வரி(பிரான்ஸ்), விஜயகுமார்(இளைப்பாறிய பொது சுகாதாரப் பரிசோதகர்- நல்லூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| விஜயஈஸ்வரன்- கணவர் | |
![]() ![]() | +94770200807 |
| ஜனகன்- மகன் | |
![]() ![]() | +94778210139 |
| யசோதரன்- மகன் | |
![]() ![]() | +94772487237 |





