யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா சென்னையைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சேதுநாயகி சுப்பிரமணியம் அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஒய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(லண்டன்), சிவசுதன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவமதி(லண்டன்), ஜெயசுதா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாம்பவி, விதுசன்(லண்டன்), சோபிதா, ஹர்சிதா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்ற சங்கீத பூஷணம் குமாரசாமி, சிவசம்பு(ஒய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஆச்சிப்பிள்ளை(ஒய்வுபெற்றஆசிரியை), சிவபாக்கியம்(ஓய்வுபெற்றஆசிரியை), சோமு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2024 புதன்கிழமை அன்று இல4, மவுண் வியூ அப்பார்ட்மெண்ட் மூவரசம்பேட்டை மெயின்ரோடு, மடிப்பாக்கம் சென்னை-600091 எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் கண்ணன் காலணி, பழவந்தாங்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா – மகன் | |
+447961169132 | |
சுதா – மகன் | |
+919940267773 |
ஜெயசுதா – மருமகள் | |
+919841432433 |