யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று Toronto கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முருகானந்தனாதன், இராஜேஸ்வரி(சீதா- பெல்ஜியம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,சுகிதா, சபிஷா, லக்ஷியா, பிரவீனன், அபிசனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரஜீவன் அவர்களின் அன்பு மாமியாரும்,கோமளாம்பிகை(பேபி- சுவிஸ்), ரேணுகா(பெல்ஜியம்), சுரேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாகரெத்தினம்(ராசன் – சுவிஸ்), அன்ரனி, சத்தியா(கனடா), விஜயலெட்சுமி(சுவிஸ்), சத்தியதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(கனடா), தவனேஸ்வரன்(தவம்- சுவிஸ்), மணிமலா(சுவிஸ்), சுவேந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வில்வரெத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற கனகசபை(சுவிஸ்), சிவச்சந்திரன்(சுவிஸ்), தணிகாசலம்(சுவிஸ்), குகராணி(சுவிஸ்), நடேசநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,உதயகுமார் சுகந்தினி(சுவிஸ்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.