திருமதி செல்லையா பரமேஸ்வரி

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் உடையார்கட்டு வடக்கு சுகந்திர புரசந்தியை தற்காலிக வதிவிடமாக கொண்ட எங்கள் தாயார் செல்லையா பரமேஸ்வரி அவர்கள் கடந்த 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று உடையார்கட்டு முல்லைத்தீவில் காலமாகியிருந்தார்.
அன்னாரது 2ம் ஆண்டு நினைவஞ்சலி ……….
அன்புள்ள அம்மா இரண்டு ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான் அம்மா
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அம்மா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அம்மா …
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அம்மா …
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம் அம்மா …
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
எங்கள் தாயாரின் மரண செய்தி கேட்டு நாங்கள் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர் வளையங்கள் மலர் மாலைகள் சாற்றியவர்களுக்கும்
உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் இதுவரை எமக்கு பல வழிகளில் உதவிகள் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வண்ணம் குடும்பத்தினர் .
சகோதரன் – துரைராஜா | |
![]() ![]() | +94755979799 |
| பேரன் – கண்ணா | |
![]() ![]() | +94768906830 |
| பேரன் – பிரவீன் | |
![]() ![]() | +94714963080 |
பெறா மகன் – ராதா | |
![]() ![]() | +94742689943 |





