யாழ். இணுவில் மஞ்சத்தடி விவேகானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், செட்டி வளவு இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி சுப்பையாபிள்ளை அவர்கள் 23-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அம்பலவாணர் மயில்வாகனம் குடும்பத்தின் இரண்டாவது புதல்வியும்,
காலஞ்சென்ற பரமு சுப்பையாபிள்ளை இரத்தினம் அவர்களின் மனைவியும்,
விக்னேஸ்வரன், மகேஸ்வரன், ஜெயகெளரி, ஆனந்தகெளரி, அற்புதகெளரி, காலஞ்சென்ற புவனேஸ்வரன் ஆகியோரின் தாயாரும்,
வதனி, விமலா, சிவகுமார், ஜெயகுமார், சற்குணசாஸ் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, ஆயிலியம், ஞானானந்தம், சதானந்தம், ஜெயமணி, சச்சிதானந்தம், அன்னலட்சுமி, அருளானந்தம், புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் சகோதரியும்,
எழிலன், கஜானன், பார்த்திபன், ஹரிகரன், கெளசிகன், சந்தியா, லக்க்ஷனா, சஜீவன், ஆதி, அனோஜன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்