கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுதுமலைச் சந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரவிசாந்தினி மகேந்திரன் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – சகுந்தலையம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நித்தியநந்தினி, கலாவதி, ரவீந்திரன், சுரேந்திரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தபோதினி, தர்சினி, லம்போதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஜரூபன், விநாயகன், சிவஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனஞ்செயன், அம்ரிதா, சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 21 225 5621