மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கைதடி மற்றும் வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜமணி தேவபாலசுந்தரம் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்-பரஞ்சோதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவபாலசுந்தரம் (முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர், மாவட்ட விளையாட்டு அதிகாரி, ஆசிரியர்-திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவநேசன் (மணிவண்ணன்) அவர்களின் அன்புத்தாயாரும்,
தர்ஷினி அவர்களின் அன்பு மாமியாரும்,
தேவக்ருத்திக், அஷ்மிதா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சுப்பிரமணியம், நவரத்தினம், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, அன்னபாக்கியம், சிவபாக்கியம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மராஜா-சரஸ்வதி தம்பியினரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 29-10-2024 செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும், 30-10-2024 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!
தொடர்புகளுக்கு:
தேவநேசன் (மகன்):- +94 71 780 9664 / +61 46 985 1413