யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரகதம் இராஜேந்திரம் அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று Toronto இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்(சின்னத்தம்பி) அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நித்தியானந்தன் மற்றும் இரஞ்சிதமலர், சிவானந்தன், வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மணிமாலா(வாசுகி), தனபாலன், சுஜாதா, சிவனேஸ்வரன்(நேசன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராஜா, இரத்தினம் மற்றும் இராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, நாகம்மா, மற்றும் பாலசரஸ்வதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்லம்மா மற்றும் பூரணம்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, செல்லத்துரை, கணேசு, பூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், நடராஜா, தில்லையம்பலம், நல்லம்மா, மற்றும் மனோன்மணி(கனடா) காலஞ்சென்ற சிற்றம்பலம் ஆகியோரின் சகலியும்,
நிரோத்சன்(நிரோ)- கிருஷ்ணிகா, காலஞ்சென்ற நிதர்ஷன், வசீகா- வாகீசன், லவ்ஷன்- டினோஜா, சர்ஜினா- சேந்தன், லிசானா- திருசன், கிஷோர், காலஞ்சென்ற றினோச், லக்க்ஷனா- ஏகாந், சபட்ரீனா- நிஷாந்தன், இந்துஷன்- ஜெருஷா, சியாந், யசிந், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியன், ஈழன், கைலன், கைராசக்தி, ரேய்டன்சாயி, நித்தீரன், எலானா, சேயன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்