திருமதி மங்களம் சோமசுந்தரம்
திருகோணமலையின் புகழ் பூத்த பெண் கல்வியாளர் திருமதி.மங்களம் .சோமசுந்தரம் காலமானார்
மூதூரைப் பிறப்பிடமாகவும்,மட்டக்களப்பு, திருகோணமலை,ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியாளர்.
காலம் சென்ற கல்வியாளர்.திருமிகு.டி.ஜி.சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவி.
என் பாசமிகு மாமியார்.
திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி,கூனித்தீவு அரசினர் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றின் முன்னாள் அதிபராக கடமையாற்றியதோடு.சேனையூர் மத்திய கல்லூரீ,சம்பூர் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் உப அதிபராகவும்,மல்லிகைதீவு மகா விதியாலயம் ,திருகோணமலை புனித மரியாள் கல்லூரி,மூதூர் முஸ்லிம் பெண்கள் கல்லூரி,களுதாவளை மத்திய கல்லூரி,எருவில் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியையாகவும் சிறப்பாக பணியாற்றியவர்.நாற்சதுர சுவிசேச சபையின் போதகராகவும் இறைபணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள்வேத வைத்தியர்.திருமதி.சுசிலா.ரிச்சட்(ஜேர்மனி)
நாற்சதுர சுவிசேச சபையின் போதகர்.வணக்கத்துக்குரிய ஜோர்ச்.நிரஞ்சன்
திருமதி.பிரமிளா.பால.சுகுமார்(லண்டன்)
இலங்கையின் பிரபல வைத்தியர் திரு.,Dr.நோயல்.சோமசுந்தரம்
திருமதி.டொரத்தி.அருள் லக்ஸ்மன்(லண்டன்)
திரு.ஹேமன்.பிரபாகர் ஆகியோரின் அன்புக்குரிய தாயார்.
காலம் சென்றவர்களான
திருமிகு.பிரகாசநாயகம்.பாய்வா
திருமிகு.வேதநாயகம்,பாய்வா
திருமிகு.ராசநாயகம் .பாய்வா
ஆகியோரின் அன்புச் சகோதரி
காலம் சென்ற திருமிகு.சிப்பிரியான் பெர்னான்டோ அவர்களின் பெறா மகள் என்பதும்
திருமதி.மணி சந்தியாப்பிள்ளை அவர்களின் உடன்பிறவா சகோதரியும் திரு.ரிச்சர்ட், திருமதி.பிரேமலதா, திரு.பாலசுகுமார், டாக்டர்.ஞானி, திரு.லக்ஷ்மன், திருமதி.சரிந்திரினி ஆகியோரின் அன்பான மாமியாரும், கிறிஸ்டோபர், அன்னிக்கா, டெபோரா, ஜொனாதன், மரிஸ்சா, டானியல், டோரா, ?ஷோன், கிறிஸ்டினா, அனாமிகா, சாம், ஹன்னா, ஜோனத்தன், ஆண்ட்ரூ, ஏய்மி, மத்யூ மற்றும் டெரியல் ஆகியோரின் அன்பான பாட்டியும், காய்யா எஸ்மே அவர்களின் பூட்டியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீட்டு முகவரி 57 தபால் கந்தோர் வீதி திருகோணமலை)
நல்லடக்க விபரம்
இன்றும் நாளையும் திருகோணமலை தபால் கந்தோர் வீதி இல்லத்தில் வைக்கப்பட்டு ,வெள்ளிக்கிழமை 26.07.2024 காலை மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஊறணி நாற்சதுர சுவிசேச சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஊறணி சவக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
நல்லடக்க ஆராதனைகள் திருகோனமலை இல்லத்திலும், ஊறணி நாற்சதுர சுவிசேச சபையிலும் நடைபெறும்.
நாளை 25.07.2024 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு 57 தபால் நிலைய வீதி இல்லத்தில் கல்வியாளர்களின் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.