திருமதி மகாலட்சுமி சிவஞானசுந்தரம்

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாவகச்சேரி கோயில் குடியிருப்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலட்சுமி சிவஞானசுந்தரம் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, இராசம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி விஸ்வலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(ஓய்வுபெற்ற பிரதம கணக்காளர், கோயில் குடியிருப்பு ஞானவீரபத்திரர் ஆலய தர்மகர்த்தா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
லலிதா, சிவகுமார்(பொறியியலாளர், லண்டன்), Dr.சுரேந்திரகுமார்(லண்டன்), சுந்தரலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர், நகர சபை- சாவகச்சேரி, பிரதேச செயலகம் சாவகச்சேரி), கமலகாந்தி(லண்டன்), கௌரி(லண்டன்) , சூரியபாலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்மினி- மோகனதாஸ், றொஷானி- பாரதி, முகுந்தினி பிரபாகரன்(லண்டன்), சாய்நாத்(லண்டன்), Dr.வீணா- Dr. வினோதன்(லண்டன்), டிலான்- லூட்ஸ்(துபாய்), ஷாயினி(லண்டன்), Dr. நிஷாந்தினி(கனடா), ருத்திரன்(கனடா), பிரவீன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிருஷ்விகா, லசஷ்விகன், சேஷ்விகன், ராகுல், கீர்தன், றொகான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| லலிதா – மகள் | |
![]() ![]() | +94772225303 |
| Dr. சுரேந்திரகுமார் – மகன் | |
![]() ![]() | +447500863899 |





