Date of Birth: 16 November 1947 – Deceased: 15 October 2024
இந்தியா-திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் காலஞ்சென்ற கலஹா (சாமிமலை) கருப்பையாபிள்ளை அவர்களின் மனைவி ருக்மணி அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மகளும், முத்தையாபிள்ளை-காமாட்சி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை-தைலம்மை ஆகியோரின் சம்பந்தியும்,
லதா, காலஞ்சென்ற தினேஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஆனந்தன் (Konica Steel) அவர்களின் அன்பு மாமியாரும்,
சகிஸ்னா, ரக்ஸனா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜ், செல்லதுரை, செல்லம்மாள், சின்னம்மாள், தைலம்மை (கலஹா) ஆகியோரின் மைத்துனியும்,
மாரிமுத்து-தங்கராஜ் (திருச்சி), காலஞ்சென்றவர்களான கமலம், ராஜேஸ்வரி மற்றும் வசந்தா (திருச்சி), விமலாதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 16-10-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு