திருமதி எட்வேட் றெஜீனா
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் றெஜீனா அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசபெத் தம்பதிகளின் ஆசை மகளும்,
காலஞ்சென்ற எட்வேட் சாமுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
றெமி(நோர்வே), எஸ்மி(சுவிஸ்), றெஜீ(பிரான்ஸ்), றொமி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, றீற்றா மற்றும் மரியநாயகம்(இலங்கை), டேவிட்(பிரான்ஸ்), ஜெரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பெயாத்தா(நோர்வே), ராஜன்(சுவிஸ்), சொப்னா(பிரான்ஸ்), குயின்சி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பியோனா, ஆரியன், டோறியன், சனா, அரன், றெனா, விஜன், நூறா, சாறா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து பி.ப 09:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியிலிருந்து பி.ப 03:30 மணிவரை இல.28/2, 3ம் குறுக்குத்தெரு, பாஷையூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 19-10-2022 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் திருப்பலி நடைபெற்று, அதனைத்தொடர்ந்து யாழ். சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றெமி – மகன் | |
+4746302170 | |
ராஜன் – மருமகன் | |
+41766819048 | |
றெஜீ – மகன் | |
+33606539247 | |
றொமி – மகன் | |
+447894291948 |