CanadaDenmarkJaffnaObituarySrilanka

திரு யோகநாதன் சிதம்பரப்பிள்ளை

யாழ். அனலைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் Germany, Denmark, Canada ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகநாதன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று  கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – கமலாம்பிகை தம்பதியினரின் அருமை மகனும், காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த தம்பிஐயா – புவனேஸ்வரி தம்பதியினரின் இனிய மருமகனும்,

பேபிராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜன், ஜெனனி ஆகியோரின் அன்பு தந்தையும்,

சசிகலா, சுகிர்தா, தேவபாலன், குமாலினி ஆகியோரின் அருமை சகோதரரும்,

பரமானந்தராசா, பவளராணி, நித்தியானந்தராசா, ஜீவானந்தராசா, காலஞ்சென்ற சிவானந்தராசா, ஹரிதரன், சுதாகரன், ஜனனி, ஜெயராம் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 16-01-2025 வியாழக்கிழமை காலை 8:00 – 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive, Gormley, Ontario) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமானந்தராசா (மைத்துனன்) 
 +1 416 400 3198
தேவபாலன் (சகோதரன்)
 +1 647 530 1583

Related Articles