திரு. வேலுப்பிள்ளை சண்முகநாதன் (சின்னத்துரை)
யாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும்,
நன்னித்தம்பி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவதர்சினி (இலண்டன்), குமுதினி (பிரதம உள்ளகக்கணக்காய்வாளர் – மாவட்டச் செயலகம், கிளிநொச்சி), திருக்குமரன் ஆகியோரின் தந்தையும்,
அருந்தவராசா (இலண்டன்), நிரஞ்சன் (ஆசிரியர் – யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி), கங்கா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருநாவுக்கரசின் சகோதரனும்,
செல்வராணி, காலஞ்சென்றவர்களான தேவதாஸ், கிருஸ்ணமூர்த்தி, விக்கேஸ்வரமூர்த்தி, சிவமூர்த்தி மற்றும் விநாயகமூர்த்தி, கிருபானி, கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும்,
சர்வேஸ்வரன், நாகேஸ்வரி, சத்தியவதி, காலஞ்சென்ற குமுதினி, தேவராஜா, கங்காதேவி ஆகியோின் சகலனும்,
பிரவணவியின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கீரிமலை செம்மண் வாய்க்கால் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
+44 794 968 9615
+94 77 023 9603