திரு. வைத்திலிங்கம் இராசேந்திரம்
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 102. திருநகர், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டி திரு. வைத்திலிங்கம் இராசேந்திரம் அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்
கேதாரகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிகா, கார்த்திகா (கனடா), கஸ்தூரிகா, காண்டீபன் ஆகியோரின் அன்பு தந்தையும்.
ஏரம்பமூர்த்தி, பூமணி (பிரான்ஸ்) காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், கமலாம்பிகை, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலரெத்தினம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராஜேஸ்வரி (நோர்வே), ஜெயபாலன் (சுவிஸ்), மோகனபாலன் (இலண்டன்), விஜயலட்சுமி (சுவிஸ்), கருணாநிதி (சுவிஸ்), கருணாதாஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயரூபன், பவநீதன் (கனடா), கானரங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தஸ்வினா, மீனுயா, கேஷிகா, தன்விகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
காண்டீபன் (மகன்):- +94 77 502 0647