யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாப்பா தோட்ட வீதி, இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா கலைச்செல்வம் அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அருந்தவமலர் அவர்களின் ஆசைக் கணவரும்,
காலஞ்சென்ற நடராசா, இராசா, தம்பித்துரை, சதாசிவம், மனோன்மணி, மீனாட்சி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, ஞானம்மா, சிற்றபேசு, சண்முகநாதன், கனகநாயகம், திருவிளங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிர்மலா, கந்தையா, கலையரசி (சுவிஸ்), தேன்மொழி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற நாகநாதன், விமலநாயகி, விநாயகமூர்த்தி (சுவிஸ்), பாஸ்கரன், பிருந்தா, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தர்மகுலராணி ஆகியோரின் மைத்துனனும்,
கணேசலிங்கத்தின் சகலனும்,
துரேசன் (பிரான்ஸ்), சிவபாலன் (முகாமையாளர் – நியூ குளோபல் பிஸ்னஸ் சிஸ்டம்), சேந்தன் (MLT – கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம், நவலோக ஸைத்தியசாலை), தேசிகன் (SDB Bank , வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சினி (பிரான்ஸ்), தர்சிகா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-04-2025 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 77 203 6537 / +94 77 274 5792