திரு சிவசுப்பிரமணியம் தயாளன்
யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், மன்னார் முருங்கன் 12ம் கட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தயாளன் அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பாக்கியம் தம்பதிகள், செல்லப்பா தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கமலாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனோரா அவர்களின் அன்புத் தந்தையும்,
பவானி, விஜயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாதேவன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லண்டன் | |
+94766449915 |