யாழ். குப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வரணி கரம்பைக் குறிச்சி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, கதிர்காமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராணி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜீத்திரா, விஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிறோஜ், ஜனார்த்தனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினிதன், விருஸ்கா, ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசலிங்கம், இராஜேஸ்வரன் மற்றும் கந்தசாமி, யோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பரமானந்தன், இந்திராணி, கலைவாணி, பரமேஸ்வரி, கலா, ரூபி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கொடிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ஜீவன் – மகன் | |
+18173199393 | |
விஜி – மகள் | |
+94759520791 |