IndiaObituary

திரு. S. ரவிச்சந்திரன்

இந்தியா-திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் (களப்பாலுடையான் கோத்திரம்) திரு. S. ரவிச்சந்திரன் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை-சரோஜா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கணேசன்பிள்ளை (சின்னாறுகாமம்)-கமலம் தம்பதியினரின் மருமகனும்,

தாமரைச்செல்வி (செல்வி) அவர்களின் அன்புக்கணவரும்,

சக்‌ஷனா, மனோஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதிர்காமநாதன், சுகுமார், சுகுணா, கண்ணன் ஆகியோரின் சகோதரனும்,

ஆனந்தனின் மாப்பிள்ளையும்,

பத்மினி, ஜெயஶ்ரீ ஆகியோரின் மைத்துனரும்,

ஜெகநாதன் (வத்துகாமம்), குமார் (கொழும்பு) ஆகியோரின் சகலையும்,

யோகநாதனின் மைத்துனரும்,

சரோஜா (தேவி), சசிகலா (சசி), புஷ்பா (கலா) ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 07-12-2024 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் இல-60/2, சொய்சாலை வீதி (நான்காம் ஒழுங்கை), நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் நாவலப்பிட்டி பவ்வாகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

S. கண்ணன் (சகோதரன்):- +94 77 321 3477
S. சுகுமார் (சகோதரன்):- +94 77 767 3364

Related Articles