IndiaJaffnaObituary

திரு பிரம்மஶ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா

இந்தியா புதுக்கோட்டை ஜமீன் பனையப்பட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஶ்ரீநிலையம், சித்தன்கேணி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா அவர்கள் 26-01-2022 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஸ்வர்க்கஶ்ரீ வீராச்சாமி ஐயர்(புதுக்கோட்டை ஜமீன் நீதவான்) ஶ்ரீமதி மீனாட்சியம்மாள் தம்பதிகள், ஸ்வர்க்கஶ்ரீ சபாரத்தின ஐயர் ஶ்ரீமதி பொன்னம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஸ்வர்க்கஶ்ரீ தியாகராஜ ஐயர்(முன்னாள் ஆசிரியர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சங்கத்தானை), புதுக்கோட்டை கணேசபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஶ்ரீமதி கமலாம்பாள்(இசையாசிரியை) தம்பதிகளின் இரண்டாவது மகனும், ஸ்வர்க்கஶ்ரீ குமாரசாமிக் குருக்கள்(சிவச்சாமிக் குருக்கள்- சித்தங்கேணி பெரியவளவு ஶ்ரீ மஹாகணபதிப் பிள்ளையார் ஆலய பாரம்பரிய குரு,நயினை நாகபூசணி அம்மனின் மஹோற்சவ குரு), காலஞ்சென்ற ஶ்ரீமதி வல்லவாம்பிகை அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ,

ஏகபுத்திரி ஶ்ரீமதி ஜெகதீஸ்வரி அம்மா(பாப்பா அம்மா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்வர்கஶ்ரீ லக்ஷ்மிகாந்தம் ஐயர், ராஜபாஸ்கரன் ஐயர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ நாகராஜ ஐயர்(சுங்க அதிகாரி இந்தியத்தூதரகம் தலை மன்னார்) காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஐயர்(Cameraman Gemini studio India) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஶ்ரீமதி கமலாம்பாள்(இந்திய தூதரகம் கொழும்பு), காலஞ்சென்ற விமலாம்பாள், ஶ்ரீராமு குருக்கள் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற ஶ்ரீமதி காயத்திரி தேவி, ஶ்ரீமதி கலையரசி ஆகியோரின் அன்பு மச்சினரும்,

காலஞ்சென்ற ஶ்ரீமதி பாலபத்மினி, ஶ்ரீமதி வித்யாரூபிணி, ஶ்ரீமதி யசோதைரஞ்சனி, பிரம்மஶ்ரீ லம்போதர குமாரசாமிக்குருக்கள்(Wales Kalpaga vinayagar temple Uk), பிரம்மஶ்ரீ சண்முகப்பிரதக் குருக்கள்(பிரித்தானியா), பிரம்மஶ்ரீ மதுசூதனக்குருக்கள்(சித்தன்கேணி பிள்ளையார் கோவில்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,

பிரம்மஶ்ரீ வேதரூபக்குருக்கள்(பிரித்தானியா), பிரம்மஶ்ரீ ஶ்ரீதியாகராஜ குருக்கள்(பிரித்தானியா), ஶ்ரீமதி மாதங்கி(தென் ஆப்ரிக்கா), பிரம்மஶ்ரீ ஜெகதீஸ்வரக்குருக்கள்(அறநெறிக் கல்வி ஆலோசகர்- இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், சர்வமதங்களின் ஒன்றியம், சேவாலங்கா மன்றம் தேசிய சமாதான சபை,இலங்கை மனித உரிமைகள் சங்கம் பாணந்துறை கந்தசாமி கோவில் பிரதமகுரு), பிரம்மஶ்ரீ சத்தியோஜாதக்குருக்கள், பிரம்மஶ்ரீ தேஜோமயன் சர்மா, ஶ்ரீமதி் தேஜோவதனி ஆகியோரின் ஆசை (கண்டிச்சித்தப்பா) சித்தப்பாவும்,

ஸ்வர்க்கஶ்ரீ ஷேஷய்யர் ஶ்ரீமதி கார்த்தியாயனி அம்மா தம்பதிகள், ஸ்வர்க்கஶ்ரீ உருத்திரதாஸக்குருக்கள்(முன்னாள் நல்லூர் கோவில் அர்ச்சகர்), ஶ்ரீமதி ஜெகதீஸ்வரி தம்பதிகள், பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரக்குருக்கள் ஶ்ரீமதி சாந்தி(ஆதீன குரு,சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில்)தம்பதிகள், ஸ்வர்க்கஶ்ரீ ராமனாதையர்(இளைப்பாறிய ஆசிரியர்) ஶ்ரீமதி பட்டம்மாள்(இளைப்பாறிய மாவட்டகல்வி அலுவலர் ஆயக்குடி இந்தியா) தம்பதிகள், பிரம்மஶ்ரீ கெங்கேஸ்வரக்குருக்கள், ஶ்ரீமதி பாலேஸ்வரி(நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

பிரம்மஶ்ரீ பால்ராஜ் சர்மா, பிரம்மஶ்ரீ ஶ்ரீகிருஷ்ண ஐயர், பிரம்மஶ்ரீ தேவானந்தக் குருக்கள், ஶ்ரீமதி கார்த்திகா, ஶ்ரீமதி கிரிவாஸினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சைலேந்திரன், விஷ்ணு, ஜனசோபினி, ஜனசுகனி, ஜனஅபிதன், லட்சுமிகாந்தன், லட்சுமி, கோபிகன், கனிஷ்கன், பாலகாந்தன், பாலினி, பிரநிஷா, வியாசன், வியாபினி, விகாஸினி, திவ்யக்‌ஷன், சாயிஷா, ரவிஜன்யா அஜிதன்யா ஆகாஷ்நாத் சர்மா, கணநாத் சர்மா, சாருகா, பானுகா, பிரஜித், ஶ்ரீரிஷிகேஷ், ஶ்ரீதன்யா ஆகியோரின் செல்லப் பாட்டனாரும்,

அபூர்வா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சித்தன்கேணி ஶ்ரீ மஹா கணபதிப்பிள்ளையார் கோவில் தெற்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நவாலி வழுக்கையாறு மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இத்துடன் தசாக கிரியைகள் பற்றிய விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வேதரூபக்குருக்கள் – பெறாமகன்
 +94777742566
லம்போதரக்குருக்கள் – மகன்
+94787083141
 +94757099181
 மதுசூதனக்குருக்கள் – மகன்
 +94778954138
யசோதைரஞ்சனி – மகள்
 +94778865758
 வித்யாரூபிணி – மகள்
 +447854917683

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =