ColomboJaffnaObituarySrilanka

திரு. பேரம்பலம் கருணானந்தம்

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு  – கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் திரு. பேரம்பலம் கருணானந்தம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – இரத்தினம் (ஆசிரியர்கள்) தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற நல்லதம்பி (ஓய்வுபெற்ற அதிபர்) – நேசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சத்தியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மநாதன் (கனடா), பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ராகுலன் (அவுஸ்திரேலியா), வினோதினி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

நிர்மலா (அவுஸ்திரேலியா), ராஜ்சுதன் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனுஜன், சனோஜன், அஜந்தன், வான்மயி, ஆதித்யவர்மன் ஆகியோரின் அன்பு பேரனும்,

குமாரவேல் (ஓய்வுபெற்ற முகாமையாளர் – ப.நோ.கூ.சங்கம்), விக்னராஜா (இலண்டன்), நளாயினி, அமிர்தநாயகி, பங்கயற்செல்வி (அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி (மல்லிகா-கனடா), புவனேஸ்வரி (நந்தா) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவகுமாரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), கணேசலிங்கம் (ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர்), சுரேஸ்குமார் (அவுஸ்திரேலியா), புனிதவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), விமலினி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சேயோன், ஸ்ரீவதனா (கனடா), கம்சா (கனடா), காலஞ்சென்ற தனுஜா, ஜெயராம் (சுவிஸ்), ஹரிஜன் (சுவிஸ்), அரிஹரன், கோகுலராம், மாதங்கி, வீணாவாகினி, மதுராந்தகி, ஹரிஷ் (அவுஸ்திரேலியா), விதுஷா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிறூபிகா, கிறூபிகன், கலாஷ் (இலண்டன்), சகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-02-2025 புதன்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-02-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 11 565 384

Related Articles