இந்தியா – திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பதுளை – கொஸ்லந்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பா.முத்தையா அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாஞ்சான்பிள்ளை – கண்ணம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,
மீனாம்பிகை, மோகன்ராஜ், கனகாம்பிகை, காலஞ்சென்ற சண்முகநாதன், செல்வராஜ், பரிமளாதேவி, சகுந்தலா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மனோ டிரேடிங் – ஹட்டன்), பெரியசாமி (அரவிந்த் டிரேடர்ஸ்), முத்துலிங்கம் மற்றும் கண்ணன் (ராம்ஸ்வேதா) ஆகியோரின் மைத்துனரும்,
கிருஷ்ணவேணியின் கொழுந்தனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு