CanadaObituaryPungudutivu

திரு நாகேந்திரம் இலட்சுமணன்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் இலட்சுமணன் அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜமுனா(வவுனியா), ரவீந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(சுவிஸ்), கோசலா(லண்டன்), ரவிக்குமார்(ஜேர்மனி), அன்பரசன்(கனடா), கங்கா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவக்குமார், யோகவதி, கேதீஸ்வரி, விக்னேஸ்வரன், மரீனா, சிவச்செல்வி, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மகாலிங்கம், தம்பிராசா, பற்குணன் மற்றும் ஜெயலட்சுமி, இரத்தினாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சாக்லட் மற்றும் கமலாதேவி அஞ்சலாதேவி, அன்னலட்சுமி, வரதலட்சுமி, செல்வமலர், இராஜேஸ்வரி, கைலாசபிள்ளை, காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற நடராசா மற்றும் புஸ்பராணி, விஜயகுமார், அழகரத்தினம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகிதன்- மாதுரி, கிருபாஜினி, தனஞ்சயன், கீர்த்தனன், நேருஜா, துஷாந், காபிஷாந், மதுஷா, மிதுஷா, கபிஷா, ஜனீஷ், அனஷா, மிலினா, ரியானா, ஜூலியான் தர்னிஸ், அன்செயா, அஸ்வின், சேகன், சேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஜனனி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.

அன்னாரை நினைவு கூரும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டபிள்ளைகள்,உற்றார், உறவினர்கள் .

நன்றி

Related Articles