JaffnaObituarySrilanka

திரு முத்துசாமி பிள்ளை சிவந்திலிங்கம் (சிவா)

இந்தியா – திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் கிராமம் திரு. முத்துசாமிபிள்ளை சிவந்திலிங்கம் அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துசாமிபிள்ளை – தைலம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், 

மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

மோனிசா, காலஞ்சென்ற சிவரஞ்சன் ஆகியோரின் அப்பாவும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவகாமி, சாரதா மற்றும் பாலசண்முகம் (சொலமன் டிரேடிங் கம்பனி, கொழும்பு – 12), பாலசுப்பிரமணியம் (சூரியா டிரேடிங் கம்பனி, கொழும்பு – 12), தாயம்மாள், மனோன்மணி, கமலம், ராதா, சரோஜினி (சென்னை), பத்மினி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசுபிள்ளை, தங்கராஜ், சந்திரசேகரம் மற்றும் பெரியசாமிபிள்ளை (தத்தமங்கலம்), பெரியண்ணன், ஆறுமுகம் (சென்னை), ரவிச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

தெய்வானை, தேவிகா, பவானி ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலசுப்பிரமணியம் (சகோதரன்) 
+94 72 744 5870

Related Articles