திரு மார்க்கண்டு குகதாஸ்
யாழ். வண்ணார்பண்ணை வட மேற்கைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Southall London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குகதாஸ் அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற றஜீகரன் மற்றும் அஸ்வந்த், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்தோஷ், கிஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்ரன், லயானா, காவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அருமைத்துரை(கொழும்பு), சண்முகதாசன்(யாழ்ப்பாணம்), புஷ்பரஞ்சினி(பிரான்ஸ்), தவரஞ்சினி(கொழும்பு), தவமணி(யாழ்ப்பாணம்), முருகதாசன்(மட்டகளப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வேந்திரன்(இலங்கை), ரவீந்திரன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற கலாரஐனி, குலேந்திரன்(நெதர்லாந்து), ஜீவராஜினி(சுவிஸ்), சிவனேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கு. அஸ்வந்த் – மகன் | |
+447780008930 | |
கு. அஸ்வினி – மகள் | |
+447903019008 | |
வீ. தவமணி – சகோதரி | |
+94212213336 | |
அ. சுபாகரன் – பெறாமகன் | |
+94777563094 |