AlaveddyColomboJaffnaObituarySrilanka

திரு. குமரேசு காந்தரூபன்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமரேசு காந்தரூபன் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமரேசு-மனோன்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்-பாலசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உதயகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கபிலன், முகிலன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சரண்யா, சிவகாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கியோன், கல்யா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

சந்திரகுமார், ஸ்டெலா சுகுணா, ஜோ ஜெயந்திரன் ஆகியோரின் சகோதரனும்,

பகீரதன், பிரகலாதன், காலஞ்சென்றவர்களான பாலகௌரி, காண்டீபன் மற்றும் திலீபன், குமணன், அல்லி, புவனா ஆகியோரின் மைத்துனரும்,

மயூரன், விதுரன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 75 327 0597 / +94 72 408 7859

Related Articles