ஓய்வுபெற்ற Tea Control Inspector
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவதாசன் அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, ஜெயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா(ஐக்கிய அமெரிக்கா), முரளிதரன்(Brisbane, அவுஸ்திரேலியா), மனோரஞ்சன்(Melbourne, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனகுமார், வினோதினி, விஷ்ணுபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லிங்கதாசன், ஈஸ்வரதாசன், சிவலோஜினி குமாரதேவன், காலஞ்சென்ற குகதாசன், மீனலோஜினி செந்தில்நாதன், ஜெயகுமார், ஜெயகுமாரி விவேகானந்தா, பத்மலோஜினி பூலோக சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிசாந்தன், நிஷிதா, சிவாங்கரன், கீரித்தனா, ஜெகன்யா, ஈஷ்வர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-03-2022 வியாழக்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று, பி.ப 05:00 மணியளவில் கெரவலப்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு | |
மீரா – மகள் | |
+14258359684 | |
முரளிதரன் – மகன் | |
+61439839862 | |
மனோரஞ்சன் – மகன் | |
+61421035211 |