திரு. கதிரவேலு செல்வம்

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு செல்வம் அவர்கள் 13-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு-கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார், தர்மகுமரன், புவனகுமாரி, தவகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அழகேந்திரராசா, பஞ்சலிங்கம் மற்றும், தர்மராசா, மகாலிங்கம், முத்துலிங்கம், தவமணிதேவி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், தனபாலசிங்கம், செல்லம்மா, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவர்ணா, ஜெயதர்ஷினி, இராஜகோபால், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனவன், அகரன், ஆருத், ஆருஷா, ஷைலஜா, ஜாஜினி, ஆருஷ், அனுஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் கோப்பாய் தெற்கு, கும்பப்பிள்ளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் இருபாலை கிழக்கு நொச்சிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 457 1889