யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெகதீஸ்வரன் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா(சிறாப்பர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேர் வயித்திலிங்கம் துரைசுவாமி மகேந்திரா, பாலாம்பிகை(சிறாப்பர்- முகாமையாளர் இலங்கை வங்கி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,உத்தமிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,கலைஆனந்தி(குழந்தை), சொரூபானந்தி(லக்கி), சோபனானந்தி(சுவீற்றி), தினேஸ், சிவானந்தி(லக்சுமி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சத்தியமூர்த்தி(யோகன்) அவர்களின் அன்பு மாமனாரும்,இராஜேஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர், லண்டன்), காலஞ்சென்ற இராமேஸ்வரன்(நகுலன், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), பரமேஸ்வரன்(பபா, ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்- இலங்கை), கனேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குலேந்திரா(பிரான்ஸ்), குகேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மேகலை(லண்டன்), மங்களகௌரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), சிவகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சியாமளா(சாந்தி-பிரான்ஸ்), சுமதி(கனடா) ஆகியோரின் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.